ஒரு அறையில் 6 குரங்குகளை வைத்து பூட்டினர் விலங்கியல் விஞ்ஞானிகள்.
அந்த அறையின் சீலிங்கில் (ceiling) பழபழவென்று ப்ளாஸ்டிக் வாழைப்பழங்கள் தொங்க விடப்பட்டிருந்தன.
அதனை அடையவேண்டும் என்றால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஏணியில் ஏறினால் மட்டுமே முடியும்...
சும்மா இருக்குமா குரங்குகள்..? ஏணியில் ஏறி அந்த வாழைப்பழங்களை அடைய முயன்றன.
எந்த குரங்காவது அந்த ஏணியில் ஏறினால், ஐஸ் தண்ணீரை பாய்ச்சியடித்தனர் அந்த விஞ்ஞானிகள்...
குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.
மீண்டும் குரங்குகள்
ஏறின... ஐஸ் நீர் பாய்ச்சியடிக்கப்பட்டன.
குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.
மீண்டும் குரங்குகள் ஏறின... ஐஸ் நீர் பாய்ச்சியடிக்கப்பட்டன...
குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.
மீண்டும் குரங்குகள் ஏறின... ஐஸ் நீர் பாய்ச்சியடிக்கப்பட்டன...
குளிர் தாங்காது வெடவெடத்து போய் இறங்கிவிட்டன.
இப்படியே சில நாட்கள் சென்றன. குரங்குகளுக்கு வாழைப்பழத்தைத் தவிர்த்து மற்ற உணவுகள் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டன என்பது தனி.
மீண்டும் ஒரு குரங்கு ஏறியது... ஜஸ் நீருக்கு பயந்து மற்ற 5 குரங்குகளும் ஏறிய அந்த ஒரு குரங்கை அடித்து இறக்கி விட்டன.
இன்னொரு குரங்கு ஏறியது... ஜஸ் நீருக்கு பயந்து மற்ற 5 குரங்குகளும் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.
இன்னொரு குரங்கு ஏறியது... ஜஸ் நீருக்கு பயந்து மற்ற 5 குரங்குகளும், ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.
இப்போதெல்லாம் விஞ்ஞானிகள் ஐஸ் நீரைபாய்ச்சியடிப்பதை முற்றலும் நிறுத்திவிட்டனர்.
அப்படியும்... இன்னொரு குரங்கு ஏறியது...
ஜஸ் நீருக்கு பயந்து மற்ற 5 குரங்குகளும் ஏறிய அந்த குரங்கை அடித்து இறக்கி விட்டன.
இப்போ... அந்த 6 குரங்குகளில் ஒன்றை எடுத்துவிட்டு புதிய குரங்கு ஒன்றை வைத்தனர்.
அந்த புதுக்குரங்குஎன்ன பண்ணும்...? க்ரெக்ட்..!
வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும் அந்த புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
புதிய குரங்குக்கு ஒன்றும் புரியல...
‘என்னடா இது..? அந்த வாழைப்பழத்தை இவங்களும்
எடுக்க மாட்டேங்குறானுங்க... நம்மளையும் எடுக்க விட மாட்டேங்குறானுங்க’ என்று நினைத்தது...
மீண்டும் வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 5 பழைய குரங்குகளும அந்த புதுக்குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
அடுத்த நாள், இன்னொரு பழைய குரங்கை
எடுத்துவிட்டு இரண்டாவது புதிய குரங்கை நுழைத்தனர் விஞ்ஞானிகள்.
அந்த இரண்டாவது புதுக்குரங்கு என்ன பண்ணும்...? ம்... வெரி குட்..!
இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது... மற்ற 4 பழைய குரங்குகளும் அந்த முதல் புதுக்குரங்கும் ,புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன..
மீண்டும் அந்த இரண்டாவது புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏற... மற்ற 4 பழைய குரங்குகளும் அந்த முதல் புதுக்குரங்கும் புதிதாக வந்த இரண்டாவது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.
இப்படியே நாட்கள் போச்சு.
விஞ்ஞானிகளும் ஒவ்வொரு பழைய குரங்காக வெளியே எடுத்துவிட்டு அதற்கு பதிலாக ஒரு புதிய குரங்கை வைத்தனர்.
புதிதாக வந்த ஒவ்வொரு குரங்கும் அந்த வாழைப்பழத்தை எடுக்க ஏணியில் ஏற... ஏற்கனவே இருந்த மற்ற குரங்குகள் அதனை அடித்து கீழே இறக்கிவிட, இப்படியே போனது.
ஒரு கட்டத்தில் அந்த அறையில் கடைசி பழைய குரங்கை நீக்கிவிட்டு...
6வது புதிய குரங்கை வைத்தனர்...
இப்போ ஆறும் புதிய குரங்குகள்..
என்னாச்சு..? ம்... அதே தான்...!
ஆறாவதாக வந்த புதுக்குரங்கு வாழைப்பழத்தை எடுக்க ஏணி வழியாக ஏறியது.மற்ற 5 புதிய குரங்குகளும் புதிய-தாக வந்த 6வது குரங்கின் மண்டையிலேயே போட்டு இறக்கிவிட்டன.
இப்போ..
'எதற்காக அந்த 5 குரங்குகளும் இறக்கிவிட்டாங்க..' என்று அந்த 6வது புதிய குரங்கிற்கும் தெரியாது.
'எதற்காக அந்த 6வது புதிய குரங்கை இறக்கிவிட்டோம்' என அந்த 5 புதிய குரங்குகளுக்கும் தெரியாது.
இப்படித்தான் நமது மனித குலமும் இருக்கிறது...
ஏன் என்று தெரியாமல் பல காரண காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம்.
Comments
Post a Comment